Skip to main content

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

 

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.
ஒரு செயலை செய்ய தொடங்கு முன் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் மிகவும் பவர்ஃபுல்லான இந்த வாக்கியத்தின் பொருள்
"விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவனிடம் காவல் தேடுகிறேன்." என்பதாகும்.
நம் மனதில் தோன்றும் ஒரு எண்ணத்தை பின்பற்றி எழும் சிந்தனையின் முடிவில் எழும் தீர்மானம் நம் ஒரு செயலுக்கு காரணமாகிறது. இந்த எண்ணகள் மனதில் தோன்ற முற்றிலும் நாம் காரணமல்ல.. அது புற தூண்டலினால் நம் மனதில் எழுவது. நம் சிந்தனையும் கூட எண்ண அலைகளை உள்ளத்தில் எழுப்பக்கூடும். அது நம் உள்ளத்தில் எழுவதை தடுக்கவும் முடியாது.. இவை எங்கிருந்து வருகின்றன?,,நமக்கு வெளியே பல காரணிகள் நம் உள்ளத்தில் எண்ணங்களை உருவாக்கலாம். அவற்றில் நம்மை நேர்வழியில் செலுத்தும் உயர் இறை சக்தியும் இருக்கும், நம்மை வழி கெடுக்கும் தீய எண்ணங்களை மனதில் இடும் தீய சக்தியும் இருக்கும், இந்த தீய சக்தி தான் சாத்தான் எனும் entity என சொல்கிறோம்.
நம்மைசுற்றியுள்ள மனிதர்களில் கூட சிலர் நமக்குள் நல்ல எண்னங்களை விதைப்பார்கள் ,சிலர் கெட்ட எண்னங்களை விதைப்பார்கள், இது போல மனிதர்கள் அல்லாத நம் கண்ணுக்கு புலப்படாத பல உயிர் வடிவங்கள் பல பரிமாணத்தில் இருக்கலாம் அவை மனிதர்க தொடர்பு கொள்ளுவதை போல நம் உணர்வு தளத்தில் தொடர்பு கொண்டு எண்னங்களை உருவாக்கலாம். அதில் இறைத்தன்மையற்ற, இறைத்தன்மைக்கு எதிரான, மேலெண்ண உணர்வு கொண்டவை தான் இந்த ஷைத்தானிய உணர்வு. இந்த சைத்தானிய entity களால் மனித உள்ளங்களை ஊடுருவி அதில் மேலெண்ணம் ,சந்தேகம், குழப்பம் ,ஊசலாட்டம் போன்ற எண்ணங்களை விதைக்க முடியும்.
ஒருவர் மனம் அச்சத்தில், இறை நம்பிக்கையற்ற நிலையில் ,அமைதியற்ற நிலையில் இருக்கும் போது சைத்தான் நல்லவன் போல் வேடமிட்டு deceptive ஆக வழி கெடுக்கும் எண்ணங்களை விதைக்கும், அதனால் நம் சிந்தனை தவறாகி அதன் விளைவால் நாம் செய்யும் செயலும் தவறாக வெளிப்படும், நம் அறிவு வழி கெடுக்கப்பட்டால் நாம் செய்வது எது சரி எது தவறு என நம்மால் உணர முடியது. எனவே தான் எந்த செயலை செய்யும் முன் நாம் மேற்கண்ட காப்பு வசனத்தை சொல்லி நம் சிந்தனையை அலர்ட் செய்வதால் இறை சக்தி சைத்தானிய எண்ணங்கள் நம் மனதை வழி கெடுப்பதை விட்டு காக்க முடியும், இதனால் நாம் செய்யும் செயல் நன்மையானதாக அமையும்.. இது ஒரு உறுதி மொழியை போல. நாம் மனதால் எதை தேர்வு செய்கிறோம் என்ற நிலைபாட்டை எடுக்க உதவியாக இருக்கும். மற்ற மத சில வழி பாடுகளின் போதும் இது போல காப்பு மந்திரங்கள் சொல்லப்படுவதுண்டு.
இந்த உறுதி மொழியை நாம் சொல்லும் போது மனம் முழுவதும் இறை சக்தியிடம் அடைக்கலமாகி விடுகிறது, ஏன் இறை சக்தி நமக்கு உதவ வேண்டும் .நாமே சிந்தித்து சரியான முடிவு எடுக்க முடியாதா என்றால் முடியாது , சாலையில் போய் கொண்டிருக்கிறீர்கள் எதோ ஒரு வழிகாட்டி பலகையை தவாறாக புரிந்து கொன்டதால் வழி தவறி விட்டால் ஒரு சரியான வழி காட்டி இல்லாமல் சரியான பாதைக்கு வர முடியாது. உங்கள் உள்ளம் சிந்திக்கும் விதம் ,புரிந்து கொள்ளும் விதம் எல்லாம் மாறி விடும், உதாரணம் சங்கிகள் அவர்களிடம் எவ்வளவு உண்மையை எடுத்து சொன்னாலும் அதை நம்ப மாட்டார்கள், அவர்கள் உலகமே மாறி விடும்.
நம்மை நாமே நேர்வழிக்கு செலுத்த சக்தியற்றவர்கள் நாம், காரணம் இந்த வழிகள் நமக்கு முன் அனுபவம் அற்றவை. எனவே நேர்வழிகளை அறிந்த உயர் சக்தியின் வழிகாட்டுதல் நமக்கு தேவை. அதோடு தீயவற்றுக்கு எதிரான நிலைபாட்டுக்கு மனதை கொண்டு வரவேண்டும்.எனவே தான் நாம் நமது எண்ணங்களை பின்பற்றுமுன் இந்த பிரார்த்தனை மிக முக்கியம். எப்போதெல்லாம் நம் மனம் சந்தேகம் ,ஊசலாட்டம், உணர்ச்சி வசப்படுதல் , குழப்பம் போன்ற மனநிலையில் இந்த பிரார்தனை நல்ல முடிவெடுக்க .மன அமைதி தர பயன்படும். நம் செயல்களை தூய்மையாக்க பயன்படும்.
அது ஏன் விரட்டப்பட்ட ஷைத்தான் என்றால் சைத்தான் நம்மிடம் நல்லவன் போல் வருவான். நான் தான் கடவுள் என்பான். ஆணவத்தின் அடையாளம், சூழ்ச்சிகள் செய்பவன். நம்பகமற்றவன், இந்த குணங்கள் என்கேயாவது உணரப்படும் போது அது எல்லா இடத்திலும் விரட்டி அடிக்கப்படுகிறது. ஆதி பிதாவை சூழ்ச்சியில் சிக்கவைத்து அதனால் இறை கோபத்துக்கு ஆளாகி விரட்டிஅடிக்கப்பட்டவன். சைத்தான் மனிதனுக்கு பகிரங்க எதிரி. வரலாற்றின் பல கால கட்டங்களில் இந்த சாத்தானிய சக்தியும் அதை பின்பற்றும் மனிதர்களும் இறை கோபத்தால் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள், என்றாலும் கியாம நாள் வரை அவன் மறைவாக மக்களை வழி கெடுப்பவனாக இருக்கிறான்.. இறைவனிடம் பாது காப்பு தேடியவர்களை மட்டும் இந்த சாத்தானிய சக்தியால் எதுவும் செய்ய முடியாது.. சைத்தானை பின்பற்றியவர்களுக்கு அவன் அவர்கள் வழிகேடுகளை அழகாக்கி காட்டுகிறான். அது ஒரு deception.
இந்த சாத்தனை பின் பற்றுபவர்கள் உலகின் எல்லா இடத்திலும் இரசியமாகவே செயல் படுவார்கள், சியோனிஸ்டுகள் சாத்தான் வழி படுபவர்கள், அவர்கள் உலகின் பெரு மதங்களின் மறைவில் அரசுகளின் மறைவில் ,வியாபாரத்தின் மறைவில் உலகை ஆள முயல்கிறார்கள், வழி தவறிய யூதர்கள்.உலகத்தின் எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டப்பட்ட காரனம் இது தான். இஸ்லாமியர்கள் குரானை ஓதி விளங்க முதலில் இந்த வசனத்தை சொல்லி விட்டு தான் ஓதுகிறார்கள் .காரணம். சாத்தானிய சக்திகள் இறை வசனங்களை ஓதுபவர் உள்ளத்தில் அதன் விளக்கங்களில் குழப்பம் ,சந்தேகம் எற்படுத்திவிடும். எனவே எப்போதும் நம் எண்ணங்களை இந்த வழிகெடுக்கும் சக்திகளிலிருந்து காத்து நம் செயல்களை நேர்வழியிலாக்குவோம். இஸ்லாம் சாத்தானிய சக்திகளுக்கும் அதன் குணங்களுக்கும் எதிரானது என்பதற்கு இந்த ஒற்றை வசனம் அத்தாட்சி.அதனால் தான் மற்ற வேதங்களின் வசனங்கள் புரட்டப்பட்டது போல் குர்ஆன் புரட்டப்படாமல் பாதுகாக்கப்படுகிறது

Comments